ஞாயிறு, 6 மார்ச், 2011

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இடைமறித்துத் தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

எந்த வகை ஏவுகணையையும் இடை மறித்துத் தாக்கவல்ல, இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இடைமறிப்பு ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.  ஒரிசா கடற்கரை வீலர் தீவில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட ஏவுதளத்தில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.  இச்சோதனைக்காக, சண்டிப்பூர் கடல் பரப்பில் இருந்து பிருத்வி ஏவுகணை 9.35 மணிக்கு ஏவப்பட்ட தகவல் கிடைத்ததையடுத்து, சண்டிப்பூரில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள வீலர் தீவில் இருந்து 9.38 மணிக்கு ஏவப்பட்டது. 
இடைமறிப்பு ஏவுகணை துல்லிமாக இலக்கை கண்டுபிடித்து வானில் தாக்கி அழித்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக