திங்கள், 28 மார்ச், 2011

லிபியாவில் 15 ராணுவ வீரர்கள் மீது பெண் கற்பழிப்பு புகார்

லிபியாவில் 15 ராணுவ வீரர்கள் தன்னை கற்பழித்ததாக ஒரு பெண் புகார் தெரிவித்துள்ளார். லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்க ராணுவத்தை கடாபி பயன்படுத்தி வருகிறார். அவர்கள் பொது மக்களை கொன்று குவித்து வருகின்றனர். இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தன்னை 15 ராணுவ வீரர்கள் கற்பழித்ததாக ஒரு பெண் பகிரங்கமாக புகார் செய்துள்ளார். அவரது பெயர் இமாம் அல்-ஒபீடி (30), நேற்று திரிபோலியில் உள்ள ஒரு ஓட்டலுக்குள் பரபரப்பாக புகுந்தார். அங்கு போர் தொடர்பாக செய்திகளை சேகரித்து வரும் வெளிநாட்டு நிருபர்கள் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை நோக்கி கடாபியின் ஆதரவு ராணுவ வீரர்கள் 15 பேர் தன்னை பலவந்தப்படுத்தி கூட்டாக கற்பழித்ததாக உரத்த குரலில் தெரிவித்தார். 
திரிபோலியில் சோதனை சாவடி அருகே நடந்து வந்து கொண்டிருந்தேன். இதை தொடர்ந்து நான் கைது செய்யப்பட்டேன். பின்னர் அவர்கள் எனது கைகால்களை கட்டி ஒரு மறைவிடத்துக்கு தூக்கி சென்றனர். அங்கு வைத்து நான் கற்பழிக்கப்பட்டேன் என்று கண்ணீர் விட்டு கதறியபடி தெரிவித்தார். 

மேலும், கற்பழிப்பு சம்பவத்தின் போது அவரது உடலின் பல பாகங்களில் ஏற்பட்ட நககீறல்கள், சிராய்ப்பு காயங்களையும் காட்டினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, தங்களது ஓட்டலுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு விடும் என கருதி ஓட்டல் ஊழியர்களும், கடாபியின் ஆதரவாளர்களும் அவரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இச்சம் பவம் லிபியாவில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. 

0 comments:

கருத்துரையிடுக