திங்கள், 28 மார்ச், 2011

ஜப்பானில் 6.5 நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் கிழக்குக் கடற்கரைப் பகுதியான ஹோன்சூவுக்குக் அருகே இன்று காலை 6.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைய்டுத்து சிறு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்ட மியாகி மிக அருகில் உள்ளது என்படு குறிப்பிடத்தக்கது. உடனடி சேத விவரங்கள் ஏதுமில்லை என்றாலும் 1.6 அடி. அளவுக்கு சுனாமி அலைகள் தாக்கலாம் என்று ஜப்பான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது மியாகி கடற்கரையைத் தாக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 3.7 மைல்கள் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. மார்ச் 11ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி, அணு உலைக் கதிர்வீச்சிலிருந்து ஜப்பான் இன்னமும் விடுபடாத நிலையில் தொடர்ந்து அங்கு பின்னதிர்வுகள் பெரிய அளவில் ஏற்பட்டு வருவது கவலிக்குறிய விஷயமாகும்.

0 comments:

கருத்துரையிடுக