வெள்ளி, 4 மார்ச், 2011
என்ஜினீயரிங் சேர்க்கைக்கான கவுன்சிலிங்: மே 16 முதல் விண்ணப்பம் வழங்க முடிவு
என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்வதற்கான கவுன்சிலிங்குக்கு மே 16ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்க அண்ணாபல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் 478 உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ. சேர்வதற்கு மொத்தம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் இடங்கள் உள்ளன. இன்னும் புதிய கல்லூரிகள் வர உள்ளன. எனவே இடங்கள் மேலும் கூட உள்ளன. அதில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் இடங்கள் கவுன்சிலிங்குக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விண்ணப்ப படிவங்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் அனைத்து அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகங்களிலும் கிடைக்கும். மேலும் பல வங்கிகளிலும் கொடுக்கப்பட உள்ளது.
விண்ணப்பம் மே மாதம் 31 ந் தேதி வரை கொடுக்கவும் அன்றே சமர்ப்பிக்க கடைசி நாளாகவும் தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல இந்த வருடம் மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ கவுன்சிலிங்கின் முதல் கட்டம் முடிந்த உடன் அதாவது அதற்கு அடுத்த வாரத்தில் தொடங்குவது வழக்கம்.
என்ஜினீயரிங் கவுன்சிலிங் ஜுலை மாதம் 1 ந்தேதி முதல் ஆகஸ்டு 14 ந்தேதிவரை நடத்தவும் அண்ணாபல்கலைக்கழகம் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
எனவே என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான முன் ஏற்பாடுகளை துணை வேந்தர் பேராசிரியர் பி.மன்னர்ஜவகர், மாணவர்சேர்க்கை தலைவர் பேராசிரியர் ரைமண்ட், பேராசிரியர்கள் நாகராஜன், ராமலிங்கம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
நக்கீரன்

0 comments:
கருத்துரையிடுக