வெள்ளி, 4 மார்ச், 2011
அத்வானி, பால் தாக்கரேக்கு நோட்டீஸ்
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே.அத்வானி, பால் தாக்கரே, உமாபாரதி உள்ளிட்ட 18 பேருக்கு சுப்ரீம் கோர்ட் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 92&ம் ஆண்டு டிசம்பர் 6&ம் தேதி கரசேவகர்களால் இடித்து தள்ளப்பட்டது. இது தொடர்பாக பா.ஜ. தலைவர்கள் எல்.கே.அத்வானி, உமாபாரதி மற்றும் சிவசேனா தலைவர் பால் தாக்கரே உள்ளிட்ட 21 பேர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் இருந்து அத்வானி, உமாபாரதி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து சிபிஐ தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், எல்.கே.அத்வானி, பால் தாக்கரே உள்ளிட்ட 18 பேர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
நக்கீரன்
0 comments:
கருத்துரையிடுக