வியாழன், 31 மார்ச், 2011
2011 இந்திய மக்கள் தொகை 121 கோடி
2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை 121.02 கோடியாக உள்ளது. இது உலக மக்கள் தொகையில் 17 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மக்கள் தொகை ஆணையர் சந்திர மௌலி இந்த தகவலை அளித்துள்ளார். 121 கோடியில் ஆண்களின் எண்ணிக்கை 62.37 கோடி என்றும், பெண்கலின் எண்ணிக்கை 58.65 என்றும் மக்கள்தொகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகையை காட்டிலும் இந்திய மக்கள் தொகை அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம் மற்றும் உத்திரபிரதேசம் மாநிலங்களின் மக்கள் தொகை அமெரிக்க மக்கள் தொகையை விட அதிகம்.
இந்தியாவில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியாக டெல்லியும், மக்கள் நெருக்கம் குறைந்த பகுதியாக அருணாச்சல பிரதேசமும் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆண்-பெண் விகிதாச்சாரம் 1000-த்திற்கு 914 ஆக அமைந்துள்ளது. இது கடந்த 60 அண்டுகளில் மிக குறைவானது என்று தெரிய வந்துள்ளது.
படித்தவர்களின் எண்ணிக்கை 778.45 மில்லியன்கள். இதில் ஆண்கள் 444.20 மில்லியன்கள், பெண்கள் 334.23 மில்லியன்கள் எனவும் கணக்கிடப்பட்டுள்ளன.
0 comments:
கருத்துரையிடுக