வியாழன், 31 மார்ச், 2011

கிரடிட் கார்டு மூலம் 5,000க்குக் கீழ் பொருள் வாங்கினாலும் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்

`5,000க்குக்கீழ் பரிவர்த்தனை செய்தாலும் வாடிக்கையாளருக்கு அதுபற்றி உடனடியாக எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 
டெபிட் மற்றும் கிரடிட் கார்டு பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஏடிஎம்மில் பணம் எடுப்பது, பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கட்டணங்களை செலுத்த மற்றவர்களின் கிரடிட் கார்டை மோசடியாக சிலர் பயன்படுத்துவதாக புகார் வந்தவண்ணம் உள்ளன. இத்தகைய செயலை தடுக்க வேண்டியது அவசியம். 

எனவே, கிரடிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிவர்த்தனைகள் பற்றியும் வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடன் எஸ்எம்எஸ் மூலமோ, இ&மெயில் மூலமோ தானியங்கி முறையில் ஆன்லைன் வழியில் தகவல் தெரிவிப்பதற்கான ஏற்பாடுகளை ஜூன் 30ம் தேதிக்குள் அனைத்து வங்கிகளும் செய்ய வேண்டும். 

`5,000&க்கும் கீழ் பரிவர்த்தனை நடைபெற்றாலும் தகவல் தெரிவிக்க வேண்டியது அவசியம்.  இதன்மூலம், அனைத்து நிலைகளிலும் கிரடிட் கார்டை அச்சமின்றி பயன்படுத்துவது அதிகரிக்கும். முறைகேடுகளும் தடுக்கப்படும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக