சனி, 12 மார்ச், 2011

ஜப்பான் சுனாமியை தொடர்ந்து ராமேஸ்வரம்-கன்னியாகுமரியில் உள்வாங்கிய கடல்


ஜப்பானில் பயங்கர சுனாமி ஏற்பட்ட நிலையில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி பகுதியில் கடல் உள்வாங்கியதால் பெரும் பீதி ஏற்பட்டது. நேற்றறு பகல் 2 மணியளவில் கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது. நீர்மட்டம் மிகவும் தாழ்ந்ததால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அதேபோல ராமேஸ்வரத்தில் பாம்பன் வடக்கு கடல் பகுதியிலும் கடல் உள்வாங்கியது. சிறிது தூரத்துக்கு மணல் மற்றும் பாறைகள் வெளியே தெரிந்தது.
இதனால் கன்னியாகுமரி, ராமேஸ்வரத்தில் பீதி ஏற்பட்டது. அங்கு வந்த சுற்றுலா பயணிகள் மிரண்டு கடற்கரையில் இருந்து வெளியேறினர். இன்று காலையில் ராமேஸ்வரம் கடல் பகுதி வழக்கத்துக்கு மாறாக அலைகள் இந் நிலையில் இன்று வழக்கத்துக்கு மாறாக ராமேஸ்வரம் கடல் மிக மிக அமைதியாக காட்சி அளித்தது. இதுவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி கடல் பகுதியில் அரபிக்கடல் பகுதியும், இந்திய பெருங்கடல் பகுதியும் சீற்றத்துடன் காணப்பட வங்காள விரிகுடா கடல் பகுதி மிக மிக அமைதியாக அலைகளே எழும்பாமல் காணப்பட்டது.

0 comments:

கருத்துரையிடுக