திங்கள், 28 மார்ச், 2011

இந்தியாவிலிருந்து இந்த ஆண்டு ஹஜ்ஜூக்கு செல்வோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பில்லை

இந்தியாவிலிருந்து இந்த ஆண்டு ஹஜ்ஜூக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்படவில்லை. ஹஜ்ஜிற்கான ஒப்பந்தந்தில் கையெழுத்திட சென்ற எஸ் எம் கிருஷ்ணா நாற்பதாயிரம் பேரை கூடுதலாக அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தும் சவுதி தரப்பிலிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. இந்த வருடம் 1,60,000 புனித பயணிகளை எதிர்பார்ப்பதாக ஜித்தாவிலிருக்கும் இந்திய துணைத்தூதர் அலுவலக செய்தி குறிப்பும் இதையே பிரதிபலிப்பதாக இருக்கிறது. இருப்பினும் கடைசி நேரத்தில் அனுமதிக்கப்படும் கூடுதல் எண்ணிக்கை இந்திய அரசு எதிர்ப்பார்த்து இருக்கிறது. கடந்த வருடம் ஆரம்பத்தில் 1,60,491 பேருக்கு அனுமதியளித்த சவுதி அரசு பின்னர் பதினொன்றாயிரம் பேருக்கு அனுமதி அளித்தது. இதில் 45,491 தனியார் ஹஜ் குழுமம் வழியாக சென்றுள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக