திங்கள், 28 மார்ச், 2011

தெற்கு எமனில் குண்டுவெடிப்பு

தெற்கு எமனில் அப்யானில் ஆயுத தொழிற்சாலையில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் எண்பதற்கும் அதிகமானோர் பலியானார்கள். ஐம்பதிற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.அரசுக்கு எதிராக போராட்டம் நடை பெற்று வரும் எமனில் நேற்று ஒரு போராட்ட குழுவினர் ஆயுத தொழிற்சாலையை கைப்பற்றியதை தொடர்ந்து இன்று குண்டு வெடிப்பு ஏற்பட்டது. தொழிற்சாலையிலிருந்து சடலங்களை தேடி எடுக்கும் பணி நடை பெற்று வருகிறது. இறந்தவர்களின் எண்ணிக்கை இனியும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை குண்டு வெடிப்பிற்கான காரணம் கண்டறியப்படவில்லை.
அப்யானில் இதுபோன்ற துயர சம்பவம் முதல் தடவையாக நடப்பதாகவும் குண்டு வெடிப்பு பதினைந்து கிலோ மீட்டர் வரை கேட்டதாகவும் கூறப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக