வியாழன், 31 மார்ச், 2011
பாகிஸ்தானுடன் நிரந்தர சமாதானம் அவசியம் - மன்மோகன் சிங்
இந்தியா, பாகிஸ்தான் தங்களுடைய பழங்கால விரோதங்களை புறந்தள்ள வேண்டும் என்றும், பாகிஸ்தானுடன் நிரந்தர சமாதானம் அவசியமாக உள்ளது என்றும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் இந்தியா-பாகிஸ்தான் மோதிய அரையிறுதிப் போட்டியைக் காண வந்த பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு நேற்று இரவு விருந்தளித்தார் பிரதமர் மன்மோகன் சிங். அப்போது பேசிய பிரதமர் மன்மோகன் சிங், இருநாடுகளும் இணைந்து பிரச்சனைக்கு கூட்டாகத் தீர்வு காண வேண்டும் என்றும், ஒன்றாக இணைந்து பெருமையுடன், கெளரவத்துடன் வாழ நிரந்தர சமாதானம் அவசியமாக உள்ளது என்று கூறினார்.
இரு நாடுகளும் தங்களது பழங்கால விரோதங்களைப் புறந்தள்ளிவிட்டு நாட்டின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறிய மன்மோகன் சிங், இருநாடுகளுக்கும் இடையே எந்தவிதமான வேறுபாடுகள் இருந்தாலும் அதனைப் தீர்ப்பதற்கான வழியைக் காண வேண்டும் என்றும் கூறினார்.
0 comments:
கருத்துரையிடுக