சனி, 9 ஏப்ரல், 2011
13 ஆவணங்களை காட்டி வாக்குப்பதிவு செய்யலாம்
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இல்லாதவர்கள், டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, பாஸ்போர்ட் உள் ளிட்ட 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக் களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித் துள்ளது. தமிழகத்தில் ஜனவரி 10ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 4 கோடியே 59 லட்சத்து 50,620 வாக்காளர்கள் உள்ளனர். பின்னர், ஜனவரி 1ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டன. இதில் சுமார் 20 லட்சம் வாக் காளர்கள் சேர்க்கப்பட்ட னர்.
இவர்களில் 60 ஆயிரம் பேருக்கு இன்னும் புகைப் படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப் படவில்லை. அடையாள அட்டை இல்லாதவர்கள், அதற்கு பதிலாக 13 ஆவணங்களை காட்டி தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இந்த ஆவணங்கள் பிப்ரவரி 28ம் தேதிக்கு முன்னதாக பெற்றிருக்க வேண்டும். அதற்கு பிறகு பெறப்பட்ட ஆவணங்களை காட்டி ஓட்டு போட முடியாது. தேர்தல் கமிஷன் சார்பில் வீடுவீடாக பூத் சிலிப் வழங்கப்பட்டு வருகிறது. புகைப்படத்துடன் கூடிய அந்த சிலிப்பை காட்டியும் ஓட்டு போடலாம்.
என்னென்ன ஆவணங்கள்?
பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், மத்திய மாநில, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சிகளில் பணிபுரியும் ஊழியர் அடையாள அட்டை, பொது வங்கி, தபால் அலுவலகங்களில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய பாஸ் புக், ஓய்வூதிய ஆவணங்கள், சுதந்திர போராட்ட வீரருக்கான அடையாள அட்டை, பட்டா பதிவு செய்யப்பட்ட சொத்துnஆவணங்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட சான்றிதழ், ஆயுத லைசென்ஸ் , மாற்றுத் திறனாளிக்கான சான்று, ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வழங்கும் பணிக்கான அடையாள அட்டை, மத்திய தொழில் அமைச்சகம் அளித்துள்ள சுகாதார காப்பீடு அட்டை ஆகிய 13 ஆவணங்களில், ஏதோ ஒன்றை காட்டி ஓட்டு போடலாம்.
0 comments:
கருத்துரையிடுக