புதன், 6 ஏப்ரல், 2011

தேர்தல் நடத்த இந்தியாவின் உதவியைக் கோருகிறது எகிப்து

எகிப்தில் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது எப்படி என்பது குறித்து அந்நாட்டு தூதர், இந்திய தலைமை தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். எகிப்தில் அதிபர் முபாரக் ஆட்சியை அகற்றக்கோரி கடந்த சில மாதங்களுக்கு முன் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 17 நாட்கள் ‌நடந்த மக்களின் தொடர் போராட்டத்திற்கு பின் அதிபர் முபாரக் பதவி விலகினார். இதைத் தொடர்ந்து அங்கு ஜனநாயக முறையில் பார்லிமென்ட் தேர்தல் வரும் செப்டம்பர் மாதமும், அதிபர் தேர்தல் அக்டோபர் மாதமும் நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்தியாவிற்கான எகிப்து நாட்டு தூதர் காலித்-ஈல்-பாக்லே, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஓய். குரோஷியை டெல்லியில் உள்ள த‌லைமை தேர்தல் அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது எகிப்தில் தேர்தல் நடத்தும் முறை குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார். தேர்தலில் மின்ணணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவது குறித்தும், தொழில்நுட்ப முறைகள் குறித்தும் தகுந்த விபரங்களை கேட்டறிந்தார்.

வெப்துனியா

0 comments:

கருத்துரையிடுக