புதன், 13 ஏப்ரல், 2011
குமரி மாவட்டத்தில் 278 வாக்குசாவடிகளில் ஓட்டுப்பதிவு வீடியோ கேமரா மூலம் பதிவு
கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராஜேந்திரரத்னூ நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் நடப்பதையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.அங்கிருக்கும் அதிகாரிகள் வாக்குசாவடி நிலவரங்களை அவ்வப்போது எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கவேண்டும். அதற்காக 1412 வாக்குசாவடி அதிகாரிகளுக்கு சிம்கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
பதற்றமான வாக்குசாவடிகளில் வெப் காமிரா வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு நடப்பதை கட்டுப்பாட்டு அறையில் இருந்தே பார்க்கும் வசதி செய்யப் பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் புகார்கள் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். புகார்கள் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறையில் 18004257042, 04652 278070, 7598706277 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
239 வாக்குசாவடிகள் பதற்றமான வாக்குசாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளன. இதில் 232 வாக்குசாவடிகளில் லைவ் வெப் காமிரா வைக்கப்பட்டு இன்டர்நெட் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும். அதுபோல் 278 வாக்குசாவடிகளில் வாக்குபதிவுகளை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 510 வாக்கு சாவடிகள் நேரடியாக கண் காணிக்கப்படும். மீதமுள்ள வாக்குசாவடிகளை கண்காணிக்க 121 மைக்ரோ அப்சர்வர் நியமிக்கப் பட்டுள்ளனர். 1412 வாக்குச்சாவடிகள் 104 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அங்கு மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறியதாக 3 ஆயிரத்து 968 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

0 comments:
கருத்துரையிடுக