திங்கள், 11 ஏப்ரல், 2011
துபாயில் வீடு, மனை விலை மும்பையைவிட 50% குறைவு
மும்பை நகருடன் ஒப் பிடுகையில், துபாயில் வீடுகள் மற்றும் மனைகள் 50 சதவீதம் வரை குறைந்த விலையில் கிடைப்பதால் இந்தியர்கள் அதிக அளவில் முதலீடு செய்தவதாக பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக ரியல் ஸ்டேட் தொழில் அங்கு சுணக்கம் அடைந்துள்ளதால், விலயும் குறைந்தள்ளது. அதை பயன்படுத்தி வெளிநாட்டினர் குறிப்பாக இந்தியர்கள் அதிகமாக துபாயில் ரியல்எஸ்டேட் மார்க்கெட்டில் முதலீடு செய் கின்றனர்.
மும்பை, டெல்லி நகரங்களுடன் ஒப்பிடுகையில் துபாயில் 30 முதல் 50 சதவீதம் வரை குறைந்த விலையில் குடியிருப்புகள் கிடைக்கின்றன. மும்பையின் கியூபெ பாரடேயில் 1 சதுர அடி 60,000 வரை விற்கப்படுகிறது. அதுவே பால்ம் ஜுமெய்ராவில் 15,000 தான் என்று குஷ்மன் அண்ட் வேக்பில்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
துபாய் அரசு வீடுகள் வாங்குவோர் மற்றும் உரிமையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதனால் மனைகள், வீடுகள் வாங்குவோர் மற்றும் முதலீடு செய்பவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. இதுபோன்ற சாதகமான காரணங்களால் ரியல் எஸ்டேட் மார்க்கெட்டில் முதலீடுஅதிகரித்து வருகிறது. துபாயில் ஒரு சதுர அடி இடம் சராசரியாக 12,000க்கு விற்கப்படுகிறது. அதுவே இந்தியாவின் மும்பை மத்திய பகுதியில் 30,000க்கு விற்கப்படுகிறது
0 comments:
கருத்துரையிடுக