திங்கள், 11 ஏப்ரல், 2011

முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு கூட்டம்

குமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் தலைவர் இப்ராஹிம்கான் தலைமையில் நடந்தது. அரபிமதரஸா மாணவர் ஷக்கீல்கான் திராத் தொடங்கிவைத்தார். பொது செயலாளர் மீரான்மைதீன் முன்னிலை வகித்தார். துணை பொதுசெயலாளர் முகமது காசீம் வரவேற்றார். பொருளாளர் ஹிமாம் பாதுஷா ஆண்டறிக்கை வாசித்தார். துணை தலைவர் அப்துல்கபூர், செயற்குழு உறுப்பினர்கள் சம்சுதீன், அப்துல்ரசீது உள்பட பலர் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில், முஸ்லிம்களுக்கு பயன்தரும் நல்ல திட்டங்களை அறிவித்துள்ள திமுக கூட்டணிக்கு முஸ்லிம் ஜமா அத் கூட்டமைப்பு ஆதரவு அளிப்பது. குமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் ஹிமாம் பாதுஷா நன்றி கூறினார்.

0 comments:

கருத்துரையிடுக