வியாழன், 14 ஏப்ரல், 2011
தமிழகத்தில் 77.4 சதவீதம் வாக்குப்பதிவு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 77.4 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை அவர் தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 86 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக 68.1 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக பிரவீண்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் 68.7 சதவீத வாக்குகளும், கொளத்தூரில் 60 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். திருவாரூரில் 75 சதவீத வாக்குகளும், ஸ்ரீரங்கத்தில் 80 சதவீத வாக்குகளும், ரிஷிவந்தியத்தில் 78 சதவீத வாக்குகளும் பாதிவாகியுள்ளதாக பிரவீண்குமார் கூறியுள்ளார்.

0 comments:
கருத்துரையிடுக