தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு சில இடங்களில் இருந்து வாக்குச்சாவடிக்கு அருகே 100 மீட்டருக்குள் இருந்த படி சிலர் வாக்காளர்களை ஓட்டு கேட்டு பிரசாரம் செய்வதாக புகார் வந்தது. அங்கு போலீசார் அனுப்பப்பட்டு பிரசாரம் செய்தவர்கள் விரட்டப்பட்டு உள்ளனர். வேறு எங்கும் எந்த அசம்பா விதங்களும் நடைபெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
புதன், 13 ஏப்ரல், 2011
குமரி மாவட்டம் முழுவதும் அமைதியான ஓட்டு பதிவு; கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தகவல்
குமரி மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ இன்று குருசடியில் உள்ள அந்தோணியார் உயர் நிலைப்பள்ளியில் காலை 8 மணிக்கேச் சென்று ஓட்டு போட்டார். அதன்பின்பு அவர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்தார். அங்கிருந்த படி மாவட்டம் முழுவதும் நடைபெறும் ஓட்டு பதிவை வெப் காமிரா மூலம் கண் காணித்தார். இது பற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வாக்கு பதிவு அமைதியாகவும், சுமூகமாகவும் நடக்கிறது. எங்கேயும் பிரச்சினை ஏற்பட்டதாக தகவல் இல்லை. ஒரு சில இடங்களில் மின்னணு வாக்கு பதிவு எந்திரத்தின் பேலட் யூனிட், கன்ட்ரோல் யூனிட்டுகளில் சில கோளாறு ஏற்பட்டது. உடனடியாக அவை சரி செய்யப்பட்டு வாக்கு பதிவு தொடர்ந்து நடந்து வருகிறது.
தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு சில இடங்களில் இருந்து வாக்குச்சாவடிக்கு அருகே 100 மீட்டருக்குள் இருந்த படி சிலர் வாக்காளர்களை ஓட்டு கேட்டு பிரசாரம் செய்வதாக புகார் வந்தது. அங்கு போலீசார் அனுப்பப்பட்டு பிரசாரம் செய்தவர்கள் விரட்டப்பட்டு உள்ளனர். வேறு எங்கும் எந்த அசம்பா விதங்களும் நடைபெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு சில இடங்களில் இருந்து வாக்குச்சாவடிக்கு அருகே 100 மீட்டருக்குள் இருந்த படி சிலர் வாக்காளர்களை ஓட்டு கேட்டு பிரசாரம் செய்வதாக புகார் வந்தது. அங்கு போலீசார் அனுப்பப்பட்டு பிரசாரம் செய்தவர்கள் விரட்டப்பட்டு உள்ளனர். வேறு எங்கும் எந்த அசம்பா விதங்களும் நடைபெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மாலைமலர்

0 comments:
கருத்துரையிடுக