செவ்வாய், 12 ஏப்ரல், 2011

லிபியாவில் அதிபர் கடாபி போர்நிறுத்த சமரசம்

லிபியாவில் போர் நிறுத்த சமரசத்தை அதிபர் கடாபி ஏற்றார். ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களை ஒடுக்க ராணுவம் பயன்படுத்தப்படுகிறது. இருந்தும் போராட்டம் ஓயவில்லை. ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர். இதையடுத்து போராட்டக் காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படை களம் இறங்கியுள்ளது. எனவே போர் முடிவின்றி கடந்த 2 மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.ஆகவே, போரை முடிவுக்கு கொண்டு வர ஆப்பரிக்க யூனியன் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அதற்காக ஒரு சமரச திட்டம் தயாரிக்கப்பட்டது.
இந்த திட்டத்துடன் லிபியா அதிபர் கடாபியை தென்ஆப்பிரிக்கா அதிபர் ஜேக்கப் ஷீமா மற்றும் 4 நாடுகளின் தலைவர்கள் திரிபோலி நகரில் நேற்று சந்தித்தனர். அந்த திட்டத்தின் அடிப்படையில் அவர்கள் கடாபியை சந்தித்து பேசினார்கள். பல மணி நேர சந்திப்புக்கு பின் சமரச திட்டத்தை அவர் ஏற்றார்.

இந்த தகவலை தென்ஆப்பிரிக்கா அதிபர் ஷீமா தெரிவித்துள்ளார். இதே சமரச திட்டத்துடன் அக்குழுவினர் பெங்காசி சென்றுள்ளனர். அங்கு போராட்டக்குழு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். போர் நிறுத்த சமரச திட்டத்தில் கடாபி பதவி விலகுவது குறித்து விவா திக்கப்பட்டது என ஆப்பிரிக்க யூனியனின் சமாதானம் மற்றும் பாதுகாப்பு கமிஷனர் ராம்தனே லமாம்ரா தெரிவித்துள்ளார். ஆனால் அதுபற்றிய முழு விவரங்கள் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.

இதற்கிடையே அஜ்தாபியா நகரில் அமெரிக்க கூட்டு படைகள் கடாபி ராணுவத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் 25 ராணுவ டாங்கிகள் அழிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராணுவம் அங்கிருந்து பின்வாங்கி ஓட்டம் பிடித்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக