வெள்ளி, 22 ஏப்ரல், 2011

தமிழ் நாட்டில் இனி மூன்று மணி நேரம் மின்வெட்டு

தமிழ் நாட்டில் பகல் நேர மின்வெட்டு 2 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது. மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல மாநிலங்களிலும் ‌மி‌ன்சார‌ ப‌ற்றா‌க்குறையாக இரு‌ப்பதா‌ல் போதுமான ‌மி‌ன்சார‌ம் பெ‌ற‌ முடிய‌வி‌ல்லை என்றும் இதனால் பகல் நேர மின்வெட்டு 2 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக அதிகரிக்கப்படுவதாகவும் இந்நிலைமை காற்றாலை மூலம் மின்சாரம் பெறப்படும் வரை தொடருமென்றும் கூறப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் 3 மணி நேர மின் வெட்டும் சென்னையில் 1 மணி நேர மின் வெட்டும் இருக்கும்.

0 comments:

கருத்துரையிடுக