செவ்வாய், 26 ஏப்ரல், 2011
குஜராத் கலவரம்: சிறப்பு புலானாய்வு குழு (எஸ்.ஐ.டி) இறுதி அறிக்கை சமர்பிப்பு
குஜராத் கலவரம் தொடர்பான இறுதி அறிக்கை சிறப்பு புலானாய்வு குழு (எஸ்.ஐ.டி) இன்று உச்சநீதிமன்றத்தில் சமர்பித்தது. இந்த அறிக்கை மீதான விவாதம் புதன் கிழமை தொடங்குகிறது. இத்துடம் கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜப்ரியுடைய மனைவி ஸாக்கியா ஜப்ரியின் மனுவும் விசாரிக்கப்பட இருக்கிறது. ஸாக்கியா ஜப்ரியின் மனு மற்றும் ஐ.பி.எஸ் ஆபீஸர் சஞ்சீவ் பட்டின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும் விவாதம் நடைபெறலாம் என்றும் தேவையென்றால் உச்சநீதிமன்றம் மறுவிசாரணைக்கும் உத்தரவிடலாமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி முதல்வர் நரேந்திர மோடி தனது வீட்டில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின்போது நானும் அங்கு இருந்தேன். கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அந்தக் கூட்டத்தை மோடி கூட்டியிருந்தார். அப்போது மோடி அதிகாரிகளிடம் கூறுகையில், இந்துக்கள் தங்களது கோபத்தைக் காட்டுவதை தடுக்க முயல வேண்டாம். அதன் மூலம் இனிமேல் கோத்ரா சம்பவம் போல ஒன்று இந்த மாநிலத்தில் நடைபெறாமல் நாம் தடுக்க முடியும் என்று கூறினார் என்றுசஞ்சீவ் பட் கூறியிருந்ததது குறிப்படத்தக்கது.
0 comments:
கருத்துரையிடுக