வெள்ளி, 29 ஏப்ரல், 2011
பள்ளியாடி ரத்னா சிட்பண்ட் ஏலச்சீட்டு நிறுவன மோசடி புகார்: உரிமையாளர் கைது
நாகர்கோவில் டெரிக் ஜங்சன் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளியாடி ரத்னா சிட்பண்ட் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் கனகராஜ் இறந்து விட்டதால் ஏலசீட்டு நிறுவனத்தை அவரது மனைவி ரத்னகுமாரி நிர்வகித்து வந்தார்.இதற்கிடையே இந்நிறுவனத்தில் பல தவணைகளில் கட்டிய ஏலசீட்டு பணம் தரவில்லை என்று ஏராளமானோர் புகார் தெரிவித்தனர். இப்பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்குமாறு குமரி மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூவை பாதிக்கப்பட்டவர்கள் சந்தித்து புகார் அளித்தனர். இதைப்போல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசிலும் புகார் தெரிவிக்கப்பட்டது.நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. மறைமலையிடம் 205க்கும் மேற்பட்டோர் சீட்டுகம்பெனி தொடர்பாக புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் மாங்கரை கம்பளாறை சேர்ந்த ரபேகால்(49) என்பவர் கடந்த 2007ம் ஆண்டு ரத்னா சிட்பண்டில் 2,00,013 ஆயிரம் ரூபாய் பிக்சட் டெபாசிட்டாக போட்டதாகவும், அது முதிர்வடைந்த பிறகும் இதுவரை திருப்பி கொடுக்கவில்லை என்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருந்தார்.இதைத்தொடர்ந்து நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ரத்னா சிட்பண்ட் உரிமையாளரான ரத்னகுமாரியை(50) கைது செய்தனர்.
மேலும் அவரது மகன்கள் பென்கர் ஷாமிலன், ஆஸ்கர் ஷாகர்ஸ்கான், ஹெல்டன் கோல்டன் ரிமோலட், எனிடர் ஷார்டின் சுமிக், ஜோன்ஸ்கா ஷைலாடுறாலி ஆயோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை புகார் கொடுத்துள்ள 205 பேரும் 2 கோடியே 63 லட்சத்து 37 ஆயிரத்து 207 ரூபாய் பணத்தை ஏலசீட்டு நிறுவனம் தங்களுக்கு வழங்காமல் மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு விடுத்துள்ளனர். மேலும் 30 கோடி ரூபாய் வரை பணம் பெறாமல் பலர் ஏமாறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
0 comments:
கருத்துரையிடுக