புதன், 6 ஏப்ரல், 2011
முஷாரப்பை நாடு கடத்துவது பற்றி பரிசீலனை: பிரிட்டன் அறிவிப்பு
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை பாகிஸ்தானுக்கு நாடு கடத்துவது பற்றி பரிசீலிக்கப்படும் என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் பெனாசிர் கொலை வழக்கில் முஷாரப் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.ஆனால் அவர் இங்கிலாந்தில் வசிப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனையடுத்து இங்கிலாந்து அரசுன் தொடர்பு கொண்டு அந்த நாட்டு உதவியுடன், முஷாரப்பை பாகிஸ்தான் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும்படி அரசாங்கத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் பாகிஸ்தான் சென்ற இங்கிலாந்து பிரதமர் கேமரூனிடம் இந்த கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், இந்த பிரச்சனை குறித்து எங்கள் அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்படுமானால் முஷாரப்பை நாடு கடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.

0 comments:
கருத்துரையிடுக