வெள்ளி, 22 ஏப்ரல், 2011

அப்துல் நாஸர் மஃதனி: வீல் செயரில் வாழ்கையை நடத்தி வரும் ஒருவரால் நாட்டின் பாதுகாப்பிற்கு எப்படி அச்சுறுத்தலாகும் கர்நாடகா அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

பெங்களூரு குண்டுவெடிப்பில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல் நாஸர் மஃதனிக்கு ஜாமீன் அளிப்பது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு நீதிபதிகளான மார்க்கண்டேய கட்ஜு, ஞான் சுதா மிஷ்ரா ஆகியோரைக்கொண்ட சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் கர்நாடக அரசுக்குநோட்டீஸ் அனுப்பியுள்ள்ளது. இது சம்பந்தமான அடுத்த வழக்கு விசாரணை வரும் 29 தேதி நடைபெறுகிறது. நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுதலாகுமென்று கூறி கடந்த பெப்ருவரி 11-ஆம் தேதி கர்நாடகா உயர்நீதிமன்றம் மஃதனியின் ஜாமீன் மனுவை தள்ளுபடிச்செய்தது. இதற்கு சுப்ரீம் கோர்டு கண்டனம் தெரிவித்ததோடு வீல் செயரில் வாழ்கையை நடத்தி வரும் அவரால் எப்படி நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுதலாகுமென்று என்று கேள்வி எழுப்பியுள்ளது. மஃதனி நிரபராதி என்றும் போலி வழக்கில் அவரை கைது செய்து சிறையில் அடைதுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் வாதாடினார். இதனை தொடர்ந்து கர்நாடக அரசின் நிலையை அறிய வழக்கு விசாரணை 29 தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு மாற்றி வைத்தது

0 comments:

கருத்துரையிடுக