வெள்ளி, 22 ஏப்ரல், 2011
பள்ளிக்கூடத்துக்கு துப்பாக்கியுடன் வந்த எல்.கே.ஜி. மாணவன் தவறுதலாக வெடித்ததில் 3 பேர் காயம்
அமெரிக்காவில் உள்ள ஹிஸ்டன் நகரில் ரோஸ் தொடக்கக்கல்வி என்ற மழலையர் பள்ளி உள்ளது. இங்கு எல்.கே.ஜி. படித்து வந்த மாணவன் ஒருவன் வீட்டில் இருந்த துப்பாக்கியை பள்ளிக்கூடத்துக்கு எடுத்து வந்து விட்டான். துப்பாக்கியை தனது கால் சட்டை பாக்கெட்டுக்குள் வைத்து இருந்தான். மதியம் அனைத்து மாணவர்களுடன் சேர்ந்து சாப்பிட சென்றான். அவன் கீழே உட்கார்ந்தபோது பாக்கெட்டுக்குள் இருந்த துப்பாக்கி தவறி கீழே விழுந்தது.
அப்போது தானாக துப்பாக்கி விசையில் அழுத்தம் ஏற்பட்டு வெடித்தது. துப்பாக்கியில் இருந்த குண்டுகள் வெளியேறின. அது மாணவர்கள் மீது பாய்ந்தது. அதில் 3 மாணவர்கள் காயம் அடைந்தனர். வீட்டில் இருக்கும் துப் பாக்கிகளை மாணவர்களை விளையாட்டாக பள்ளிக் கூடத்துக்கு எடுத்து வருவது அமெரிக்காவில் அடிக்கடி நடக்கிறது. அவர்கள் சக மாணவர்களுடன் சண்டை போட்டு சுட்டுக்கொல்லும் சம்பவங்களும் நடக்கின்றன.

0 comments:
கருத்துரையிடுக