சனி, 28 மே, 2011
பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் ஜூன் 20ம் தேதி கிடைக்கும்
பத்தாம் வகுப்பு, மெட்ரிக் குலேஷன் தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் ஜூன் 20ம் தேதி அந்தந்த பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்க கம் அறிவித்துள்ளது. தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதி மையங்களில் இருந்து மதிப்பெண் பட்டியல் களை பெற்றுக் கொள்ள லாம்.
மறுகூட்டல்: தேர்வு எழுதிய அனைத்து பாடங்களுக்கும் மறு கூட்டல் செய்ய விரும்பு வோர் விண்ணப்பங்களை 30ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலகங்கள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகங்கள், ஆகிய வற்றில் பெற்றுக் கொள்ள லாம். பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பங்கள் மேற்கூறப்பட்ட அலு வலகங்களில் ஜூன் 3ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
மறுகூட்டலுக்கான கட்டணம்:
பத்தாம் வகுப்பு மற்றும் ஓஎஸ்எல்சி வகுப்பு களுக்கான மொழி மற் றும் ஆங்கில பாடங் களுக்கு ரூ.305 மற்ற பாடங்களுக்கு ரூ.205 செலுத்த வேண்டும். மெட்ரிக்குலேஷன் வகுப்புக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.305 செலுத்த வேண்டும். ஆங்கிலோ இந்திய வகுப்புக்கு மொழிப் பாடத்துக்கு ரூ.205, மற்ற பாடங்களுக்கு ரூ.305 கட்டணம் செலுத்த வேண்டும்.

0 comments:
கருத்துரையிடுக