சனி, 28 மே, 2011
எஸ்.எஸ்.எஸ்.சி. தேர்வு தக்கலை கல்வி மாவட்டத்தில் முதல் 3ம் இடம் பெற்றவர்கள்
தேர்வில் 493 மதிப்பெண்கள் பெற்று குமரி மாவட்ட அளவில் 2ம் இடம் பிடித்த மாணவி வைகை (குலசேகரம் புனித ஊர்சுலாள் மகளிர் உயர் நிலைப்பள்ளி), மாணவர் ஆல்டிரின் டி.எஸ். பென்னி (மணலிக்கரை மரியகொரட்டி மேல்நிலைப்பள்ளி) ஆகியோர் தக்கலை கல்வி மாவட்ட அளவில் முதல் இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளனர்.490 மதிப்பெண்கள் பெற்று, தக்கலை அமலா மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஐஸ்வர்யா கல்வி மாவட்ட அளவில் 2ம் இடம் பிடித்துள்ளார். இவரது தந்தை சிவசங்கரன் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக உள்ளார். தாயார் லதா தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். எதிர்காலத்தில் டாக்டராக விரும்புவதாக மாணவி ஐஸ்வர்யா தெரிவித்தார்.
முளகுமூடு குழந்தை இயேசு உயர்நிலைப்பள்ளி மாணவி சார்லட் மேரி 489 மதிப்பெண்கள் பெற்று கல்வி மாவட்ட அளவில் 3ம் இடம் பிடித்துள்ளார். இவரது தந்தை ஜாண் பிரிட்டோ. தாய் மேரி கிறிஸ்டி. உடன் பிறந்தவர்கள் 3 பேர். எதிர்காலத்தில் டாக்டராக விரும்புவதாக மாணவி சார்லஸ் மேரி தெரிவித்தார்.
இதே போல் மணலிக்கரை மரியகொரட்டி மேல்நிலைப்பள்ளி மாணவர் அப்துல் அஜீஸ், 489 மதிப்பெண்கள் பெற்று கல்வி மாவட்ட அளவில் 3ம் இடம் பிடித்துள்ளார். இவரது தந்தை பெயர் அப்துல் பதாப். வெளிநாட்டில் உள்ளார். தாயார் ஆச்சியா பீவி. எதிர்காலத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆக விரும்புவதாக அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.
0 comments:
கருத்துரையிடுக