ஞாயிறு, 1 மே, 2011
நேட்டோ தாக்குதலில் கத்தாபி மகன் கொல்லப்பட்டார்
திரிபோலி: நேட்டோ படை தாக்குதலில் கத்தாபி உயிர் தப்பினார். ஆனால் அவரது இளைய மகன் மற்றும் அவரது பேரக்குழந்தைகள் மூன்று பேர் உயிர் இழந்ததாக அந்நாட்டு அரசு செய்திதொடர்பாளர் இப்ராகிம் தெரிவித்தார். தாக்குதல் நடக்கும் பொழுது கத்தாபியும், அவரது மனைவியும், தங்கள் மகனின் இல்லத்தில் இருந்ததாகவும், எனினும் தாக்குதல் தொடங்கியதும் அவர்கள் இருவரும் பத்திரமாக வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. லிபியா ராணுவத்திலோ அரசிலோ எந்த பங்கும் இல்லாத கத்தாபியின் மகனை கொன்றது போர்குற்றம் என்று கூறியுள்ளார் லிபியா செய்திதொடர்பாளர்.

0 comments:
கருத்துரையிடுக