ஞாயிறு, 1 மே, 2011

ஆந்திராவில் 2 எம்.எல்.ஏ.க்கள் சுடப்பட்டனர்.

அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதேஹதுல் முஸ்லிமின் எல்.எல்.ஏ.வாக இருப்பவர் அக்பரூதின் ஒவாயிசி.  இவர் சனிக்கிழமை காலை ஹைதராபாத்தில் உள்ள சந்திராயன் குட்டா என்ற இடத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு காரில் ஏற சென்றார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 பேர் இவரை நோக்கி துப்பாகியால் சுட்டார்கள். இதில் தோளில் குண்டு பாய்ந்து அக்பருதீன் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்த மற்றொரு எம்.எல்.ஏ. அகமது பலாலாவுக்கும் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓட முயன்ற 4 பேரையும் நோக்கி அகமது பலாலா மெய்காவலர் துப்பாக்கியால் சுட்டார். அதில் ஒருவர் காயம் அடைந்தார்.  உடனே எம்.எல்.ஏ.க்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு டாக்டர்கள் அக்பரூதின் தோளில் பாய்ந்த குண்டை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். இது பற்றி தகவல் அறிந்ததும் முதல் அமைச்சர் கிரண்குமார் ரெட்டி போலீஸ் டி.ஜி.பி.ரவீந்திர ராவ் உள்பட உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். பின்னர் கிரண் குமார் ரெட்டி மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெறும் 2 எம்.எல்.ஏ.க்களை பார்த்தார். நிலத்தகராறு பிரச்னையில் அக்பரூதின் சுடப்பட்டதாக கூறப்படுகிறது.
இரு எம்.எல்.ஏ.க்கள் சுடப்பட்டதற்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ், மாநில இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் கே.நாராயணன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக