திங்கள், 16 மே, 2011

என்ஜினீயரிங், மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்படுகின்றன

என்ஜினீயரிங் சேரவும், மருத்துவ படிப்பில் சேரவும் இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் பிளஸ்&2 தேர்வு முடிவு கடந்த 9&ந் தேதி வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவ&மாணவிகளில் 30 சதவீதம் பேர் என்ஜினீயரிங் சேர உள்ளனர். எனவே என்ஜினீயரிங் சேர்க்கை பிரதானமாக இருக்கிறது. என்ஜினீயரிங் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் கொடுக்கப்பட உள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி.மன்னர் ஜவகர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 
தமிழ்நாட்டில் 486 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ. அல்லது பி.டெக். படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் கவுன்சிலிங்கை நடத்த உள்ளது. கல்லூரிகளில் உள்ள இடங்களில் 65 சதவீத இடங்களை அரசுக்கு கல்லூரி நிர்வாகம் கொடுத்துவிடும். சிறுபான்மை கல்லூரிகள் 50 சதவீத இடங்களை மட்டுமே அரசுக்கு கொடுக்கும். அரசுக்கு கொடுக்கும் இடங்கள் இப்போதைக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் உள்ளன. இந்த வருடம் 400&க்கும் மேற்பட்ட கல்லூரிகள் கூடுதல் இடங்கள் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதனால் 30 ஆயிரம் இடங்கள் கூடுதலாக வர வாய்ப்பு உள்ளது. 
எனவே மாணவ&மாணவிகள் எதிர்பார்த்த என்ஜினீயரிங் மாணவர்சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 62 இடங்களில் கொடுக்கப்பட உள்ளது. முதல் நாள் கூட்டமாக இருப்பதால் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 20 கவுண்ட்டர்கள் திறக்கப்படுகின்றன. 
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், தரமணியில் உள்ள அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரி, புரசைவாக்கத்தில் (ஓட்டேரி&நம்மாழ்வார்பேட்டை இடையே) உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி ஆகியவற்றில் விண்ணப்பபடிவங்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பங்கள் 31&ந் தேதி வரை வழங்கப்பட உள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்க ஜூன் 3-ந் தேதி கடைசி நாள். 2 லட்சத்து 20 ஆயிரம் விண்ணப்பம் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் 62 மையங்களில் இருக்கின்றன. தேவைப்பட்டால் மேலும் அச்சடிக்கப்படும். இந்த வருடம் கடந்த வருடத்தை காட்டிலும் அதிகம் பேர் என்ஜினீயரிங் சேர்வார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு மன்னர் ஜவகர் தெரிவித்தார்.
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். என்ற பல் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம் இன்று முதல் கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 17 அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேர 1653 இடங்கள் உள்ளன. மேலும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 635 வர உள்ளன. இந்த வருடம் சென்னை மருத்துவ கல்லூரியும், அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரியும் இப்போது உள்ள தலா 150 இடங்களுக்கு பதிலாக தலா 250 இடங்கள் கேட்டு அரசுக்கு விண்ணப்பித்துள்ளன. இதையட்டி இந்திய மருத்துவ கவுன்சில் இரு கல்லூரிகளையும் வந்து ஆய்வு செய்து சென்றுள்ளன. எனவே கூடுதலாக 200 இடங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் ஒரே ஒரு அரசு பல்மருத்துவ கல்லூரிதான் உள்ளது. அதுவும் சென்னையில் உள்ளது. இந்த கல்லூரியில் சேர 85 இடங்கள் உள்ளன. இதுதவிர, சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகள் மூலம் அரசு ஒதுக்கீட்டில் 891 இடங்கள் வர உள்ளன. விண்ணப்பங்கள் விலை ரூ.500. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.விண்ணப்பம் ஜூன் 2&ந் தேதி வரை அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும், அரசு பல் மருத்துவ கல்லூரியிலும் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க ஜூன் மாதம் 2&ந் தேதி கடைசி நாள். பிளஸ்&2 மார்க் அடிப்படையில் ரேங்க் பட்டியல் ஜூன் மாதம் 21&ந் தேதி வெளியிடப்படுகிறது. ஜூன் 30&ந் தேதி கவுன்சிலிங் தொடங்க இருக்கிறது.

0 comments:

கருத்துரையிடுக