திங்கள், 30 மே, 2011

உலகிலேயே பிரமாண்டமான ரயில் பாலம்

உலகிலேயே பிரமாண்டமான 1,315 அடி உயரத்தை கொண்டு ரயில் பாலம் ஒன்று காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள கத்ரா தரம் இடையே செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வருகிறது. இந்த திட்டம் காஷ்மீர் மாநிலத்தில் உதம்பூர் ஸ்ரீநகர் பாரமுல்லா ரயில்வே திட்டத்தின் ஒரு பகுதி என கருதப்படுகிறது. இந்த ரயில் பாலம் குத்பு மீனார் போல 5 மடங்கு பெரியது எனவும், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் டவரை விட 115 அடி உயரம் உள்ளது எனவும், ஆகையால் இந்த ரயில் பாலம் உலகிலே பிரமாண்டமான ரயில் பாலம் என கருதப்படுகிறது. உலகிலேயே பெரிய ரயில் பாலம் என கருதப்பட்ட பிரான்ஸ் நகரில் உள்ள தரன் நகரின் குறுக்கே 990 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள ரயில் பாலத்தையும் மிஞ்சியது காஷ்மீரின் கட்டப்பட்டு வரும் இந்த செனாப் ஆற்று ரயில் பாலம்.



இந்த செனாப் ஆற்று பாலம் ரூபாய் 5005 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது எனவும், இந்த செனாப் பாலத்தில் 2500 கோடி டன் இரும்பு பயன்படுத்தபடுகிறது எனவும், கொண்கன் ரயில்வே கார்பரேஷன் உலகிலேயே 179 பெரிய ரயில் பாலம் கட்டிய இந்த கர்ப்றேஷந்தான் இந்த செனாப் ஆற்று பாலத்தையும் கட்டி வருகிறது என்றும், இமய மலையில் அமயைருக்கும் இந்த செனாப் ஆற்று ரயில் பாலம் கடும் பணியையும் தாங்கப்படும் வகையில் கட்டப்பட்டு வருகிறது என்றும் வடக்கு ரயில்வே தலைமை நிர்வாக அதிகாரியான சாஹாதே ராம் தெரிவித்தார்.

0 comments:

கருத்துரையிடுக