ஞாயிறு, 29 மே, 2011
நேட்டோ படைத் தாக்குதலில் 12 குழந்தைகள் பலி
ஆப்கானிஸ்தானில் கூட்டணிப் படைகளான நேட்டொ படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் 12 குழந்தைகள் மற்றும் 2 பெண்கள் உட்பட 14 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளதை ஆப்கன் மற்றும் நேட்டோ படையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹெல்மான்ட் மாகாணத்தில் நவ்ஜாத் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மீது நேட்டோ தலைமையிலான சர்வதேச பாதுகாப்பு உதவிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநரின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த பலி எண்ணிக்கை உறுதிப்படுத்தப்பட்டால் நேட்டோ படையினரின் தாக்குதலில் இந்த ஆண்டில் பொதுமக்கள் அதிகம்பேர் உயிரிழந்தது இந்த சம்பவமாக இருக்கும்.
0 comments:
கருத்துரையிடுக