திங்கள், 16 மே, 2011
சவூதி தூதரக அதிகாரி சுட்டுகொலை
பாகிஸ்தானில் தெற்கு பாகிஸ்த்தானில் உள்ள சவுதி தூரகத்தில் குண்டுகள் வீசப்பட்ட 5 நாட்களில் இஸ்லாமாபாத் கராச்சியில் சவுதி அரேபிய தூரக அதிகாரி ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். சவூதி தூதரக அதிகாரி ஹசன் எம்.எம்.அல். கதானி அலுவலகத்திற்கு செல்லுகையில் அவரை 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 மர்ம நபர்கள் வழிமறித்து ஹசனை சுட்டு விட்டு ஓடிவிட்டனர். உயிருக்கு போராடிய ஹசனை ஜின்னா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர். நடந்த இந்த சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுபேற்கவில்லை. கடந்த 11 ஆம் தேதி கராய்ச்சியில் உள்ள சவூதி தூரகத்தி இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர் இரண்டு குண்டுகளை வீசினர். இந்த தாக்குதலில் யாரும் காயம் அடையவில்லை .ஆனால் இந்த வெடிகுண்டு தாக்குதலில் தூதரக வாளாகத்திற்குள் உள்ள கட்டிடங்களை சிறிதளவு சேதமடைந்துள்ளதாக சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் உசாம பின் லேதான் கொல்லப்பட்டதற்கு பின்பு தான் நடந்துள்ளது ஆகையால் பாகிஸ்தானில் இருக்கும் சவூதி அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அந்நாட்டு அதிகாரிகளை சவூதி துணை வெளியுறவுத்துறை அமைச்சர் இளவரசர் காலித் பின் சவுத் கேட்டுகொண்டார்.

0 comments:
கருத்துரையிடுக