திங்கள், 16 மே, 2011
தமிழக முதல் அமைச்சராக ஜெயலலிதா இன்று பதவி ஏற்றார்
கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 160 இடங்களில் போட்டியிட்ட ஆ.தி.மு.க 146 இடங்களை கைபற்றி அமோக வெற்றி பெற்றது. ஆ.தி.மு.க கூட்டணி மொத்த உள்ள 234 தொகுதிகளில் 230 தொகுதிகளை கைபற்றி உள்ளது. இந்நிலையில் , மூன்றாவது முறையாக இன்று திங்கட்கிழமை பதவி ஏற்ற செல்வி ஜெயலலிதா ஏழைகளுக்கு மாதம் தோறும் 20 கிலோ அரிசி மற்றும் பரம ஏழைகளுக்கு மாதம் தோறும் 35 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும், மீன் பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு ரூபாய் 2000 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், செல்வி ஜெயலலிதா அரசு பணியில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாதம் வழங்கப்படும் என்றும் செல்வி ஜெயலலிதா கூறியுள்ளார்

0 comments:
கருத்துரையிடுக