செவ்வாய், 7 ஜூன், 2011
குமரியில் பருவ மழை நோயை தடுக்க புதிய தொலைபேசி எண் 04652 277224
குமரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மதுசூதனன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
குமரி மாவட்டத்தில் தற்போது பருவமழை பெய்து வருவதால் மாசுப்பட்ட நீர், சுற்றுப்புற சீர்கேடு மற்றும் கொசுக்களின் அபரீத உற்பத்தி காரணமாக பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. மலேரியா, டெங்கு, சிக்குன் குன்யா காய்ச்சலை பரப்பும் கொசுப்புழுக்களை உண்ணும் கப்பீஸ் அல்லது கம்புசியா வகை மீன்களை குடிநீர் தொட்டியில் வளர்ப்பதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியை தடுக்கலாம். சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்ப்பதன் மூலம் டைப்பாயிடு, வயிற்றுப்போக்கு மற்றும் மஞ்சள்காமாலையை தடுக்கலாம்.
எலி காய்ச்சல் பரவுவதை தடுக்க கொதிக்க வைத்த நீரை பருகவேண்டும். பன்றிகாய்ச்சல் அறிகுறி காணப்பட்டால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிய பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் நோய் கண்டவர்களை அறிந்தால் நோய் கண்காணிப்பு மையத்திற்கு 04652 277224 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
கருத்துரையிடுக