செவ்வாய், 7 ஜூன், 2011
தமிழக சிறுமி பலாத்காரம் செய்து கொடூர கொலை, 13 வயது மாணவன் கைது
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள முத்தலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு நான்கரை வயதில் ஸ்ரீஜா என்ற மகள் இருந்தார். இந்தக் குழந்தை முத்தலாபுரம் அருகே உள்ள ஒரு பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தது. சசிகுமாரும், மாலதியும் கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள ஆனவிலாசம் மேப்பாறையிலுள்ள ஒரு ஏலத்தோட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் இங்குள்ள ஒரு காலனியில் தங்கியுள்ளனர். பள்ளி விடுமுறை என்பதால் மகள் ஸ்ரீஜாவை சசிகுமார் தன்னுடன் அழைத்து வந்திருந்தார். சசிகுமாரும், மாலதியும் பணிக்கு செல்லும்போது ஸ்ரீஜாவை வீட்டில் விட்டு விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 1ம் தேதி இவர்கள் இருவரும் வழக்கம்போல ஏலத்தோட்டத்திற்கு பணிக்கு சென்றனர்.அன்று மாலையில் அப்பகுதியை சேர்ந்த 4 சிறுவர்கள் அங்குள்ள ஏலத்தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பெரிய மரத்தின் பொந்தில் ஒரு சிறுமியின் உடல் மறைத்து வைத்திருந்ததை பார்த்தனர். இதைப்பார்த்து பயந்த சிறுவர்கள் அந்த வழியாக வந்தவர்களிடம் விவரத்தைக் கூறினர்.
இது குறித்து குமுளி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த குழந்தை சசிகுமாரின் மகள் ஸ்ரீஜா என தெரியவந்தது.
பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்தக் குழந்தையின் பிறப்புறுப்பில் பலத்த காயம் இருப்பதால் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கொல்லப்பட்ட சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு 13 வயது சிறுவன் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் அவனது அண்ணன் மனு ஆகியோரிடம் போலீசார் விவரத்தைக் கூறி அவனை ரகசியமாக கண்காணிக்கும்படி கூறினர். இதை அறிந்த அந்த சிறுவன் கடந்த 2 தினங்களுக்கு முன் வீட்டினரை கொல்வதற்காக சாப்பாடில் பியூரிடான் விஷத்தைக் கலந்தான். இதைப் பார்த்த அந்த சிறுவனின் தாய் உடனடியாக போலீசில் விவரத்தைக் கூறினார்.
போலீசார் விரைந்து வந்து அந்த சிறுவனை விசாரித்த போது சிறுமியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டான். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீஜாவை வாழைப்பழம் வாங்கித் தருவதாக கூறி ஏலத்தோட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளான். பின் அந்த சிறுமியை பலாத்காரம் செய்து விட்டு தன்னிடமிருந்த கிட்டிப்புல் விளையாடும் கம்பால் பிறப்புறுப்பில் பலமாக குத்தினான். இதில் ரத்தம் கொட்டி சிறிது நேரத்தில் அந்த சிறுமி பரிதாபமாக இறந்தாள். இதன் பிறகு உடல் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக சிகரெட் லைட்டரால் முகத்தை எரித்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல வீட்டுக்கு சென்றுள்ளான். முதலில் சிறுமியின் உடலைப் பார்த்த சிறுவர்களின் கூட்டத்தில் இந்த சிறுவனும் இருந்தான்.
அப்போது ஒன்றும் தெரியாதது போல நடித்த இந்த சிறுவன் போலீசுக்கும் உடலைக் காட்டிக் கொடுத்தான். இதனால் போலீசாருக்கு முதலில் இந்த சிறுவன் மீது எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. ஆனால் குமுளி போலீசாரின் திறமையான விசாரணையால் 13 வயது சிறுவன் வலையில் சிக்கினான்.
ஏற்கனவே பலமுறை பக்கத்து வீடுகளில் நடந்த சிறுசிறு திருட்டுக்களில் இந்த சிறுவன் பிடிபட்டுள்ளான். இது தான் போலீசுக்கு முதல் சந்தேகத்தை ஏற்படுத்தியது. 2 நாள் விசாரணைக்குப் பின்னர் சிறுவனை குமுளி போலீசார் இன்று தொடுபுழா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
0 comments:
கருத்துரையிடுக