செவ்வாய், 14 ஜூன், 2011

100 பச்சிளம்குழந்தைகளை விற்ற புரோக்கர்

மதுரை மாவட்டத்தில் சுடுதண்ணீர் வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் சுப்பரமணி. இவரின் வயது 65 . இவர் ஒரு புரோக்கர். சமீபத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் பல பச்சிளம்குழந்தைகள் திருட்டு போவது அதிகரித்து வந்தது மேலும் அரசு மருத்துவமனைக்கும் வரும் வெள்ளியூர் நோயாளிகளை ஏமாற்றி தனியார் மருத்துவமனைக்கு சில புரோக்கர்கள் அழைத்து செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போலீசார் மப்ட்டி உடையில் கண்காணித்து வந்தனர். இப்படி கண்காணித்து வரும்போது தான் சுடுதண்ணீர் வாய்க்காலை சேர்ந்த சுப்புரமணி புரோக்கர் அகப்பட்டார். இவருடன் மதுரை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஆன அமுதவல்லியும் பிடிப்பட்டார். 
கையும் கலவும்மாய் பிடிப்பட்ட சுபரமணியை போலீசார் தீவிரமாய் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. விசாரணையில் புரோக்கர் சுபிரமணி மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து பல பச்சிளம்குழந்தைகளை திருடி விற்றதாகவும், பெரும்பாலும் கள்ளகாதளுக்கு பிறந்த குழந்தைகள் மற்றும் திருமணம் முன்பு பிறக்கும் குழந்தைகளை விற்றதாகவும், அப்படி திருமணம் முன்பு பிறந்த ஒரு என்ஜெனியர் மாணவியின் குழந்தையை கூடல் புத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு மருத்துவருக்கு விற்றதாகவும் அந்த மருத்துவர் இப்போது இறந்து விட்டதாகவும் அந்த குழந்தை என்ன ஆனது என்று தெரியவில்லை என்றும், மேலும் சென்னையை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் மனைவி கற்பகமிடம் இருந்து ஆண் குழந்தையை திருடி தருவதாக கூறி ரூபாய் 7 ஆயிரம் பணம் வாங்கியதாகவும்,இதுவரைக்கும் புரோக்கர் சுபிரமணி 100 க்கு மேற்ப்பட்ட பச்சிளம்குழந்தையை கடத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த கடத்தல் விசாரணை பற்றி போலிஸ்தரப்பில் கூறுகையில் இந்த கடத்தலை புரோக்கர் சுபிரமணி ஒருவர் மட்டுமே செய்திர்க்க இயலாது என்றும் இதில் வேறு யார் யார்க்கு தொடர்பு இருக்கிறது என்று தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

0 comments:

கருத்துரையிடுக