செவ்வாய், 14 ஜூன், 2011

1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை தொடர உச்சநீதிமன்றம் உத்தரவு

கடந்த கல்வியாண்டில் தி .மு .க ஆட்ச்சின்போது சமச்சீர் கல்வி பாடத்திட்டம் 1 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை அமல்படுத்தப்படிருந்தது மேலும் இந்த ஆண்டு முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்த இருந்தது. ஆனால் ஆ.தி.மு.க ஆட்ச்சி அமைந்த போது சமச்சீர் கல்வி திட்டம் கல்வி தரத்தை உயர்த்த உதவாது என்றும் மேலும் இந்த ஆண்டு பழைய பாட புத்தகங்களை பின்பற்ற வேண்டும் என்றும் பழைய புத்தகங்களை அச்சிட அவகாசம் தேவை என்றும் கடந்த ஜூன் 1 ஆம் தேதி திறக்க இருந்த பள்ளிகூடங்களை நாளை திறக்கலாம் என்று சட்டசபை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலித்தா தெரிவித்தார். 
மேலும் ஒரு தனி நபர் நிபுணர் குழு ஒன்று அமைத்து சமச்சீர் கல்வியை சீரமைத்த பின்னர் பரிசிலனை செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் நடப்பு ஆண்டில் சமச்சீர் கல்வியை தொடர வேண்டும் என்று உத்தரவுவிட்டது. மேலும் இந்த ஆண்டு 1 ஆம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை தொடர வேண்டும் என்றும் மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை அமல்படுத்துவதை குறித்து தலைமை செயலாளர் தலைமையில் தனி நபர் குழு ஒன்று அம்மைக்க வேண்டும் என்றும் இந்த குழுவில் பள்ளி கல்வி துறை செயலாளர்,பள்ளி கல்வி இயக்குனர்,பள்ளி கல்வி வாரிய அதிகாரிகள் 2 பேர், மற்றும் கல்வி ஆராய்ச்சி கவுன்சிலின் சார்பில் 2 பேறும் இடம் பெற வேண்டும் என்றும் மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 வாரத்திற்குள் இந்த தனி நபர் குழு தன் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்றும் மேலும உயர்நீதிமன்றம் ஒரு வாரத்திக்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் அதுவரை 2 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பாடங்கள் நடத்த வேணாடம் என உத்தரவுவிடப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக