வியாழன், 2 ஜூன், 2011

குமரிக்கு ஜூன் 17ல் உள்ளூர் விடுமுறை

குமரி மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
தக்கலை ஷேக் பீர் முகம்மது ஒலியுல்லா நினைவுநாள் பெருவிழாவை முன்னிட்டு 17.6.2011 (வெள்ளிக்கிழமை) அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. 17.6.2011 அன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக ஜூலை மாதம் 2 வது சனிக்கிழமையான 9.7.2011 அன்று குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 comments:

கருத்துரையிடுக