வியாழன், 2 ஜூன், 2011

குமரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம்

குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக சாரல் மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை கொட்ட துவங்கியுள்ளது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகள் என அனைத்து  பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் முற்றிலும் குறைந்து விட்டது. வறண்டு காணப்பட்ட நீர்நிலைகளிலும் தண்ணீர் நிரம்ப துவங்கியுள்ளது. நேற்று குலசேகரம், திருவட்டார், தக்கலை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. மலையோர பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 
நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43.03 அடியாக இருந் தது. அணைக்கு 275 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 51.80 அடியாக இருந்தது. அணைக்கு 55 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. சிற்றார்&1ல் நீர்மட்டம் 9.61 ஆக இருந்தது. அணைக்கு 107 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. சிற்றார்&2ல் நீர்மட்டம் 9.71 அடியாக இருந் தது. அணைக்கு 160 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. பொய்கை அணை நீர்மட்டம் 18.30 அடியாக காணப்படுகிறது. தென்மேற்கு பருவமழை குமரி மாவட்டத்தில் தீவிரமடைந்துள்ளது விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக