புதன், 29 ஜூன், 2011
1990 ஆம் ஆண்டு முஸ்லிம்களை கொலை செய்த வழக்கில் 21 வருடம் கழித்து தீர்ப்பு
கடந்த 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி பீகாரில் உள்ள நவாடா மாவட்டத்தை சேர்ந்த குலினி என்ற கிராமத்தில் ஹிந்துக்கள் கொண்டாடும் ஹோலி பண்டிகையின் போது முஸ்லிம் இருக்கும் பகுதியில் எப்பொதும் ஊர்வலம் நடத்தாதவர்கள் அன்று மட்டும் முஸ்லிம் வாழும் பகுதியில் மசிஜித் அருகில் ஊர்வலம் செல்ல முயன்றபோது கலவரம் ஏற்ப்பட்டது. இந்த கலவரத்தால் ஹிந்துக்கள் ஆயுத்ததைக்கொண்டு முஸ்லிம் வாழும் பகுதியில் தாக்குதலை நடத்த தொடங்கினர்.மேலும் இந்த தாக்குதலின் போது நூற் ஆழம்,ஹபீஸ் மியாஹ்,பீர் மியன், சல்மான் மியான் மற்றும் வாஹீத் மியான் என்ற 5 முஸ்லிம்கள் பட்டபகலில் கொலைசெய்யப்பட்டன. பின்பு அதே கிராமத்தை சேர்ந்த முகமது யூனுஸ் என்பவர் இக்கலவரத்தில் ஈடுப்பட்ட மொத்தம் 57 நபரை முஸ்லிம்களை கொலை செய்ததாக கைது செய்யுது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவுசெய்தார்.
இந்த 57 குற்றவாளிகளில் 47 பேர் வழக்கை சந்தித்து வருகின்றன,மேலும் 9 பேர் வழக்கு தொடர்பான விசாரையின் போதே இறந்து விட்டனர்.மேலும் அதில் ஒருவர் இன்னும் தலைமறைவு ஆகி வருகிறார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக பீகாரில் உள்ள நவாட மாவட்டத்தின் நீதிமன்றம் 37 நபர்களை நிருபராதிகள் என்றும், 10 நபர்களை குற்றவாளிகள் என்றும் மேலும் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை வருகிற ஜூலை மாதம் 27 ஆம் தேதி வழங்கி மற்றும் குற்றவாளிக்கான தண்டனையை வருகிற ஜூலை மாதம் 29 ஆம் தேதி அறிவிக்கும் என தெரிவித்துள்ளது.

0 comments:
கருத்துரையிடுக