புதன், 29 ஜூன், 2011

அஜ்மீர் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் அறிவிப்பு

அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கில் கேரளாவை சேர்ந்த ஹிந்துத்துவா பயங்கரவாதி சுரேஷ் நாயர், ரமேஷ் கொஹில், மகாத் பாயி மற்றும் பாவேஷ் பட்டேல் என்ற 4 நபரை குற்றவாளியாக என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு ஏஜென்சி) அறிவித்துள்ளது. மேலும் இந்த குற்றவாளிகளை கைது செய்வதற்கு போதிய தகவல் அலிப்பவர்கலூக்கு ருபாய் 2 லட்சம் பரிசு தொகையையும் அறிவித்துள்ளது. மேலும் இந்த 4 நபரை குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சி வெளியிட்ட குற்றப்பத்திரிக்கையில் கடந்த 2007 ஆம் ஆண்டு டிம்பர் மாதம் 29 ஆம் தேதி நடந்த ஆர்.எஸ்.எஸ் தலைவரான சுனில் ஜோஷி கொலை வழக்கில் மகாத் பாயி என்பவரை தேடி வருவதாகவும்,
மேலும் சுனில் ஜோஷி கொள்ளப்படும் முன்பு மகாத் பாயி என்பவர் அவருடன் இருந்ததாகவும் பின்பு தலைமறைவு ஆகிவிட்டதாகவும், மேலும் 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி நடந்த அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு சம்மந்தமாக இந்த 4 பேருக்கும் நேரடி தொடர்பு உள்ளது என்றும்,மேலும் ஆர்.எஸ்.எஸ் தலைவரான கொல்லப்பட்ட சுனில் ஜோஷி கட்டளைப்படிதான் இவர்கள் அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்திருக்க கூடும் என்றும், மேலும் இவர்கள் குண்டு வெடிப்பிற்கு டயமராக 11 சிம் கார்டுகளும் 4 நோக்கியா போன்களும் உபயோகித்து வந்துள்ளார்கள் என்றும் தேசிய புலனாய்வு ஏஜென்சி வெளியிட்ட குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது.மேலும் சுரேஷ் நாயர் என்பவர் குஜராத்தில் உள்ள பல பகுதிகளில் தலைமறைவாக தங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்றும், இந்த தகவல் அடிப்படையில்தான் தேசிய புலனாய்வு ஏஜென்சி குஜராத்தில் சென்று சுரேஷ் நாயர் என்பவற்றின் தந்தையான தாமோதர நாயரிடம் விசாரணை நடத்தி வருகின்றன.

0 comments:

கருத்துரையிடுக