ஞாயிறு, 26 ஜூன், 2011
மார்த்தாண்டம் அருகே அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 வாலிபர்கள் பலி
களியக்காவிளையில் இருந்து மதுரைக்கு இன்று காலை ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ் காலை 9.30 மணி அளவில் மார்த்தாண்டத்தை அடுத்த சிராயன்குழி பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கி ளும், பஸ்சும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 வாலி பர்கள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மோட்டார் சைக்கிளில் வந்தது மார்த்தாண்டத்தை அடுத்த பயணம் அருகே உள்ள வடக்குகுழிவிளை பகுதியை சேர்ந்த செல்லசுவாமி என்பவரது மகன் சேகர்(வயது 28) என்பதும், அவருடன் வந்தது அவரது நண்பரான ஆற்றூர் பரம்புவிளையை சேர்ந்த செல்லத்துரை என்பவரது மகன் அனிஷ்(21) என்பதும் தெரிய வந்தது.
சேகர் லாரி டிரைவர் ஆவார். அனிஷ் தற்போது தான் பாலிடெக்னிக் படித்து முடித்துள்ளார். விபத்து தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:
கருத்துரையிடுக