திங்கள், 27 ஜூன், 2011

அதிகரித்து வருகிறது சர்க்கரை நோயாளியின் எண்ணிக்கை

லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி மற்றும் அமெரிக்காவில் உள்ள ஹார்வேர்ட் பல்கலைகழகத்தின் ஆராயிச்சியாளர்கள் உலகில் உள்ள சர்க்கரை நோயாளிகளை குறித்து ஆய்வு ஒன்றை நடத்தி வந்தன.அவர்கள் நடத்தி வந்த இந்த ஆய்வில் உலகில் முன்பை விட சர்க்கரை நோயாளியின் எணிக்கை இரண்டு மடங்காக அதாவது முன்பு 15 .5 கோடி மட்டுமே இருந்த சர்க்கரை நோயாளியின் எண்ணிக்கை தற்போது 35 கோடியாக அதிகரித்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. 
மேலும் இந்த சர்க்கரை நோயாளியின் அதிகரிப்பை தடுக்க பாதுகாப்பான நடவடிக்கைகளும், சிகிச்சை முறைகளும் மிகவும் அவசியம் என ஆராயிச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த ஆய்வை குறித்து இம்பீரியல் கல்லூரி மாஜித் இஸ்சத்தி கூறுகையில் உலகில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க இயலவில்லை என்றும் சர்க்கரை நோயாளியின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுபடுத்த முயலாததால் சர்க்கரை நோயாளியின் சிறுநீர் பிரச்சனைகளும், இதய நோய் மற்றும் கண் பார்வைகளும் பாதிக்கபடுவதர்க்கு காரணமாகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது என்று இஸ்சத்தி தெரிவித்துள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக