வியாழன், 30 ஜூன், 2011

துபாயின் மிகப் பெரிய வர்த்தக கூட்டாளி இந்தியா 3 மாத வர்த்தகம் ரூ2 லட்சம் கோடி

துபாயின் மிக பெரிய வர்த்தக கூட்டணி நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது. மிகவும் பின்தங்கிய நிலையில் சீனா, அமெரிக்கா நாடுகள் 2 மற்றும் 3ம் இடங்களை பிடித்துள்ளன. இதுகுறித்து துபாய் சுங்கத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு: துபாயின் மிகப் பெரிய வர்த்தக கூட்டாளி நாடாக இந்தியா உள்ளது. இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் இந்தியா, துபாய் இடையேயான வர்த்தகம் ஸி2 லட்சம் கோடி. உலக நாடுகளுடன் துபாயின் மொத்த வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு மட்டும் 34 சதவீதம். 
சீனா, அமெரிக்கா ஆகியவை முறையே 2 மற்றும் 3ம் இடம் பிடித்துள்ளன. சீனா, துபாய் இடையே ரூ13,050 கோடி. அமெரிக்காவுடன் வர்த்தகம் ரூ9,180 கோடி. துபாயின் ஏற்றுமதியில் சுவிட்சர்லாந்து 2வது இடமும், சவுதி அரேபியா 3ம் இடமும் வகிக்கின்றன. ஏற்றுமதியிலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் (ஜனவரி - மார்ச்) இதுவரை இந்தியாவில் இருந்து துபாயின் இறக்குமதி ரூ36,720 கோடி. துபாயில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி ரூ27,765 கோடி. இவ்வாறு துபாய் சுங்கத் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக