வியாழன், 30 ஜூன், 2011
போட்டோவுடன் மார்க்ஷீட் இந்தாண்டு முதல் அமல்
தேர்வுத் துறையில் போதிய அளவில் பணியாளர் பற்றாக்குறையும் இருந்து வருவதால் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் பட்டியல் தாயார் செய்யும் போது பல குளறுபடிகள் நடப்பது உண்டு. குறிப்பாக பிறந்த தேதி மாறுவது, பெயரின் இனிஷியல் மாறுவது, மதிப்பெண்கள் மாறுவது உள்ளிட்டவை நடப்பது வழக்கம். இவற்றை தவிர்க்க தேர்வுத் துறை கவனமாக பல ஆய்வுகளை நடத்தி மதிபெண் பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு சில ஆண்டுகளுக்கு முன்பு போலி மதிப்பெண் பட்டியல் நடமாடத் தொடங்கியது. அதனால் மதிப்பெண் பட்டியலில் சில ரகசிய குறியீடுகளை அச்சிட்டு தேர்வுத் துறை வழங்கியது. அத்துடன் அரசு முத்திரை அடங்கிய ஹோலோகிராமையும் மதிப்பெண் பட்டியலில் பதிப்பித்து கொடுத்தது. இவற்றை எல்லாம் மீறி போலி மதிப்பெண் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டன.
இப்படி பல குளறுபடிகளையும் தவிர்க்க, இனி போட்டோவுடன் கூடிய மதிப்பெண் பட்டியலை வழங்கலாம் என்று தேர்வுத்துறை ஆய்வு செய்து வந்தது. இது போன்ற முறை எட்டாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு முதல் நேரடியாக எட்டாம் வகுப்பு தேர்வு எழுதும் முறை ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதனால் பிளஸ்2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியலில் போட்டோ வைத்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்படும் தனித் தேர்வில் போட்டோ ஒட்டிய மதிப்பெண் பட்டியல் வழங்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டே இது செயல்பாட்டுக்கு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்வுத் துறை ஈடுபட்டுள்ளது.

0 comments:
கருத்துரையிடுக