தமிழகத்தில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 1653 எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கின்றன. இவை தவிர 10 தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 800 இடங்கள் உள்ளன. சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் படிப்பிற்கு 85 இடங்களும், 17 தனியார் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 700க்கும் மேற்பட்ட இடங்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ளது. 2011-2012ம் கல்வி ஆண்டு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 16 முதல் 31ம் தேதி வரை வழங்கப்பட்டது. மொத்தம் 24 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையானது. விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இதையடுத்து, எம்பிபிஎஸ் படிக்க விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு 10 இலக்கு ரேண்டம் எண் கடந்த 16ம் தேதி வழங்கப்பட்டது. 20765 பேருக்கு ரேண்டம் எண் வழங்கப்பட்டது. திங்கள், 20 ஜூன், 2011
எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியல் நாளை வெளியாகிறது 30ம் தேதி கவுன்சலிங்
தமிழகத்தில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 1653 எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கின்றன. இவை தவிர 10 தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 800 இடங்கள் உள்ளன. சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் படிப்பிற்கு 85 இடங்களும், 17 தனியார் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 700க்கும் மேற்பட்ட இடங்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ளது. 2011-2012ம் கல்வி ஆண்டு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 16 முதல் 31ம் தேதி வரை வழங்கப்பட்டது. மொத்தம் 24 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையானது. விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இதையடுத்து, எம்பிபிஎஸ் படிக்க விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு 10 இலக்கு ரேண்டம் எண் கடந்த 16ம் தேதி வழங்கப்பட்டது. 20765 பேருக்கு ரேண்டம் எண் வழங்கப்பட்டது.
பிளஸ் 2 மார்க் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கும் பணிகள் முடிந்துவிட்டது. மருத்துவக் கல்வி இயக்குனரகம் ரேங்க் பட்டியலை நாளை 21ம் தேதி வெளியிடுகிறது. இதையடுத்து, எம்பிபிஎஸ் முதற்கட்ட கவுன்சலிங் வரும் 30ம் தேதி தொடங்குகிறது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனரகம் வளாகத்தில் நடைபெறும் முதல் நாள் கவுன்சலிங்கில் உடல் ஊனமுற்றோர், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கு சேர்க்கை நடைபெறும். ஜூலை 1ம் தேதி பொது கவுன்சலிங் தொடங்க உள்ளது.
இந்த ஆண்டு 2 புதிய கல்லூரி
தமிழகத்தில் கடந்த ஆண்டு வரை 8 தனியார் சுயநிதி கல்லூரிகள் இருந்தன. இந்த ஆண்டு பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசா மருத்துவக் கல்லூரி, சேலத்தில் அன்னபூர்னா மருத்துவக் கல்லூரி புதிதாக வந்துள்ளது. இரண்டு கல்லூரிகளிலும் 300 இடங்கள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 150 இடங்கள் இருக்கின்றன.
0 comments:
கருத்துரையிடுக