திங்கள், 20 ஜூன், 2011
அதிகாரிகளுக்கு இரையான மாணவி அனுபவித்த கொடுமைகள்; தனிப்படை விசாரணையில் “திடுக்” தகவல் பிரமுகர்கள் மாயம்
கேரளா மாநிலம் எர்ணா குளத்தைச் சேர்ந்தவர் சுபீர். இவரது 14 வயது மகளை சினிமாவில் நடிக்க வைக்க ஏற்பாடு செய்தார். இதற்காக ஏஜெண்டுகளை சந்தித்தபோது அவர்கள் அந்த சிறுமியை விபசாரத்தில் தள்ளினர். இதில் வருமானம் கிடைத்ததால் மகள் என்றும் பாராமல் அவரது தந்தையே மகளை விபசாரத்தில் ஈடுபடுத்தினார். கேரளாவில் முக்கிய பிரமுகர்கள், சினிமா ஏஜெண்டுகள் மற்றும் சில நடிகர்கள் ஆகியோர் அந்த 14 வயது மாணவியுடன் உல்லாசமாக இருந்தனர். இதில் மனம் உடைந்த மாணவி தந்தையிடம் இருந்து தப்பி உறவினர் மூலம் போலீசில் தஞ்சம் அடைந்தார். அவர்களிடம் தனது பரிதாப வாழ்க்கை பற்றி கூறி அழுதார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
மேலும் சிறுமியை விபசாரத்தில் தள்ளிய தந்தை சுபீரை கைது செய்தனர். சுபீரிடமும் அவரால் வாழ்க் கையை இழந்த மகளிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் குமரி மாவட்டம் கண்ணு மாமூட்டைச் சேர்ந்த காண்டி ராக்டர் மணிகண்டன் என்ப வரும் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. அவர் சிறுமியை கெடுத்ததோடு மட்டுமல்லாமல் தனது தொழிலுக்கு உதவி செய்ய அதிகாரிகளுக்கும் அந்த சிறுமியை விருந்தாக்கிய விவரம் தெரிய வந்தது.
இதனால் அதிர்ந்து போன கேரள போலீசார் மணிகண்டனோடு இணைந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அதிகாரிகள் யார்? யார்? என பட்டியல் தயாரித்தனர். இதில் குமரி மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் பலரது பெயர்கள் இடம் பெற்றது. இதையடுத்து போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியை அழைத்து அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.
அப்போது சிறுமி தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் யார்? யார்? என்ற விவரத்தை தெரிவித்தார். மேலும் அவர் போலீசாரிடம் கூறியதாவது:- எனது தந்தை சுபீர் பல இடங்களுக்கும் என்னை அழைத்துச் செல்வார். யாராவது கேட்டால் என்னை அவரது உறவு பெண் அல்லது தெரிந்த பெண் என்று கூறுவார்.
ஒருமுறை மூனாறில் உள்ள ஒரு லாட்ஜூக்கு அழைத்துச் சென்றார். அங்கு 3 பேர் தங்கி இருந்தனர். அவர்களிடம் என்னை தனக்கு தெரிந்த ஒருவரது பெண் என்று அறிமுகம் செய்தார். ஆனால் அவர்கள் என்னிடம் கேட்ட போது நான் சுபீரின் மகள் என்று கூறினேன். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அறையை விட்டு வெளியே வந்து என் தந்தையை சரமாரியாக தாக்கி விட்டு போய் விட்டனர். எனக்கு கிடைக்கும் பணம் அனைத்தையும் என் தந்தையே வாங்கிக் கொள்வார்.
சில நேரம் அறைக்குள் வைத்து என்னோடு தங்கி இருக்கும் நபர்கள் பணம் கொடுப்பார்கள். அதை நான் மறைத்து வைத்திருப்பேன். ஆனால் வெளியே வந்ததும் மறைத்து வைத்த பணத்தைக் கூட என் தந்தை பறித்துக் கொள்வார். பலரிடமும் என்னை பறிகொடுத்ததால் என் உடல் நிலை பலகீனமாகி விட்டது. இதைப் பார்த்து பரிதாப பட்டு சிலர் வெளியேச் சென்றிருக் கிறார்கள். இவ்வாறு அந்த சிறுமி போலீசாரிடம் கூறியுள்ளார்.
சிறுமியால் அடையாளம் காட்டப்பட்ட நபர்களிடம் கேரள தனிப்படை போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் குமரி மாவட்டத்துக்கு வந்த தனிப்படையினர் இங்கு சிறுமியை சீரழித்த பிரமுகர்களை அடையாளம் கண்டு வருகிறார்கள். மேலும் காண்டிராக்டர் மணிகண்டன் அளித்த வாக்கு மூலம் அடிப்படையிலும் அவரது தொழிலுக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் யார்? யாரென கண்டறியப்பட்டு வருகிறது.
அவர்களில் சிலரை விசாரணைக்காக கேரள போலீசார் தேடிச்சென்றனர். ஆனால் அவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை. அவர்கள் எங்குச் சென்றார்கள் என்பதும் தெரிய வில்லை. இதனால் அவர்களை தேடும் பணியில் உள்ளூர் போலீசாரின் உதவியை கேரள போலீசார் நாடி உள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக