ஞாயிறு, 12 ஜூன், 2011
பாகிஸ்தானில் நேற்று குண்டு வெடிப்பு, 35 பேர் உயிர் இழந்தனர்
நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் என்ற நகரில் இருந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டில் திடிரென சக்தி வாயிந்த இரட்டைகுண்டு வேடித்ததில் பெரிய தீ பரவியது.இதனால் சூப்பர் மார்கெட்டும் அதன் பக்கத்தில் இருந்த மற்ற கட்டிடங்களும் இடிந்தன பலரும் இடிப்பாட்டில் சிக்கினர். குண்டு வெடித்த சிறிது நேரத்தில் அங்கு கூட்டம் கூட ஆரம்பித்தது அப்பொழுது மீண்டும் தற்கொலை படையினரால் மீண்டும் தாக்குதல் ஆரம்பித்தன. தகவல் அறிந்து மீட்ப்பு படையினர் வந்து மீட்ப்பு பணியில் ஈடுபட்டிருந்தன . குண்டு வெடிப்பில் 35 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர் மேலும் 100 பேர் படுகாயம் அடைந்தனர்.மேலும் பலரின் நிலைமை கவலை கிடமாக இருக்கிறது என கூறப்படுகிறது.
தற்கொலைபடை தாக்குதல் நடத்தியவருக்கு சுமார் 18 வயதுக்குள் தான் இருக்கும் என கருதப்படுகிறது.இரட்டை குண்டு வெடித்ததால் சூப்பர் மார்க்கெட் கட்டிடமும் அதன் பக்கத்தில் இருந்த மற்ற கட்டிடமும் இடிந்ததில் இடிப்பாட்டிற்குள் நிறையபேர் சிக்கிகொண்டனர் அவர்களை முழுமையாக மீட்க படாத நிலையில் மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

0 comments:
கருத்துரையிடுக