செவ்வாய், 28 ஜூன், 2011
அரசு விரைவுப் பேருந்தில் தீ உயிர் தப்பிய 36 பயணிகள்
நேற்று மாலை சென்னையிலிருந்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து ஒன்று நாகர்கோவிலுக்கு 36 பயணிகளுடன் புறப்பட்டது. சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட்ட இந்த பேருந்து இன்று அதிகாலை கோவில்பட்டி அருகே உள்ள நோட்டிலோன்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது பேருந்து ஒடினரான சாலமோன் ஏதோ கருகும் வாசனையை உணர்ந்துள்ளார். உடனே பேருந்து ஒடினரான சாலமன் பேருந்தை நிறுத்திவிட்டார்.பேருந்தை நிறுத்திய சாலமோன் கீழே இரங்கி பேருந்தை பார்த்த போது பேருந்தின் பின் புறம் உள்ள சக்கரங்கள் தீ பிடித்து எறிந்த நிலையில் இருதுள்ளன.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பேருந்து ஒடினரான சாலமோன் பேருந்தில் இருக்கும் எல்லாப் பயணிகளையும் பேருந்தை விட்டு இறங்க சொல்லி விட்டார்.36 பயணிகளும் பேருந்தை விட்டு இறங்கியதும் உடனடியாக தீ அணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீ அணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.

0 comments:
கருத்துரையிடுக